வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் மற்றும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, வாழ்க்கைச் செலவு தொடர்பான உபகுழுக் கட்டமைப்பு கீழ்வரும் வகையில் அமையும்.
01.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ – தலைவர்
02.பிரதமர் ரணில் விக்ரமசிங்க
03.கடற்றொழில் அமைச்சர்
04.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
05.விவசாய அமைச்சர்
06.பெருந்தோட்டத்துறை அமைச்சர்
07.மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர்
08.வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்
அதேபோல், மேற்குறிப்பிட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் லைமையில் மற்றும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களின் தலைமையில் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
