மன்னார் மாவட்டம் மாதோட்டத்தில் அமைந்துள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று (06) புதன் கிழமை நடைபெற உள்ளது.
முற்றிலும் கருங்கற்களைக் கொண்டு கற்றளிக் கோயிலாக உருவாக்கப்பட்டிருக்கும் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று (06) புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரையான சுப நேரத்தில் இடம்பெற உள்ளது.
நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கேதீச்சரம் ஆலயம் இலங்கையின் ஆதி குடிகளான நாகர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
