நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைமீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 600 கைதிகள் தப்பியோடி உள்ளனர்.
நைஜீரியா தலைநகர் அபுஜாவில் குஜே என்ற சிறைச்சாலை உள்ளது. துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் குறித்த சிறைச்சாலைமீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 600 கைதிகள் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.அவர்களில் 300 கைதிகளை பொலிஸார் பிடித்துள்ளனர்.
மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் ஓருவர் உயிரிழந்தாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.