‘ஓரணியில் திரள்வோம் – கோட்டை அரசை விரட்டுவோம்’ – திகா அழைப்பு!

” நாட்டின் நல்எதிர்காலம் கருதி நாளை 9ஆம் திகதி அனைவரும் ஓரணி சேர்வோம். மக்களை வதைக்கும் சக்திகளுக்கு ஒற்றுமையால் தக்க பாடம் புகட்டுவோம்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் திகாம்பரம் எம்.பி. பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles