நாளை போராட்டம்! திடீரென ஊரடங்கு அமுல்!!

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
 
பொலிஸ் ஊரடங்கு காலப்பகுதியில் வீடுகளில் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
பொலிஸ் ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகள் ஊடாக பயணித்தல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles