20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட குழுவின் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள குறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு, ’20’ எவ்வாறு அமைய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
பரிந்துரை அறிக்கை பிரதமரிடம் நாளை (15) கையளிக்கப்படும் என மேற்படி குழுவின் தலைவர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
குழு உறுப்பினர்கள் விரம்
1. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
2. அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில
3. அமைச்சர் மொஹமட் அலி சப்ரி
4. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
5. அமைச்சர் விமல் வீரவன்ச
6. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
7. இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்
8. பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா
9. பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த