பிரிட்டனில் புதிய பிரதமரைத் தேடும் வேட்டை

பிரிட்டனில்  புதிய பிரதமரைத் தேடும் வேட்டை சூடுபிடித்துள்ளது. எட்டுப் பேர் முதல் சுற்றைக் கடந்து வந்துள்ளனர்.

முக்கிய வேட்பாளராகக் கருதப்பட்ட கிரான்ட் ஷாப்ஸ் ஒதுங்கிக்கொண்டார். முன்னாள் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், ரெஹ்மான் கிஸ்தி ஆகியோரும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டனர்.

போட்டியில் உள்ள அனைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் 20 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் முதல் சுற்று வாக்கெடுப்பில் போட்டியிடுவார்கள்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் முன்பதிவு நிறைவடைந்து விட்டது. முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பிக்களின் ஆதரவை பெறத் தவறும் எந்தவொரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் அதிகச் செல்வாக்கோடு உள்ளார். பிரதமர் போரிஸ் ஜோன்சன், பதவி விலகுவதில் முக்கியப் பங்கு வகித்தவர் அவர். ரிஷி சுனாக் சர்ச்சைக்குரிய தலைவர். வரியை உயர்த்தியவர் என்று குறைகூறப்பட்டவராவார்.

Related Articles

Latest Articles