சாமிமலையிலிருந்து மஸ்கெலியாவுக்கு பாடசாலை பஸ் சேவை, காலை வேளையில் சேவையில் அமர்த்தபடாமையினால் தாம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் குறித்த நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் இப்பகுதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் காலை 6 மணி தொடக்கம் 8 மணிக்கும் இடையில் மூன்று இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பாடசாலை சேவைக்காக ஒரு பஸ் மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருகிறது ஏனைய இரண்டு பஸ்களும் மாயமாகி விட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இருந்து சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மஸ்கெலிய மற்றும் புளூம்பீல்ட் போன்ற பாடசாலைகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
மூன்று பஸ்கள் சேவையில் ஈடுபட்ட இப்பகுதியில் தற்போது ஒரு பஸ் மட்டும் சேவையில் ஈடுபட்டுள்ளதால் நெரிச்சலுக்கு மத்தியிலும் மிதி பலகையிலும் பயணிக்க வேண்டியுள்ளது .
மேலும் இவ்வாண்டு சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை ஆசிரியர்களும் குறித்த நேரத்திற்கு தமது பணிக்கு செல்ல முடியவில்லை .
இப்பகுதியில் தொடர்ச்சியாக காணப்படும் இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் எதிர்கால கல்வியை தடையின்றி தொடர வழி செய்ய வேண்டும் .
( சாமிமலை நிருபர் ஞானராஜ்)