ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதில்லை என்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் வாக்கினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தாம் இந்த தெரிவின்போது வாக்களிக்கவுள்ளதாக அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் உரிய திட்டங்களை முன்வைக்காமை காரணமாக, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் தமது கட்சி வாக்களிக்காது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன ல் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிருப்தி அணியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்பட்டு வந்திருந்த நிலையில் நால்வர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் பொறுப்புகளை ஏற்றதன் மூலம் சு.க. தரப்பில் பிளவு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது புதிய ஜனாதிபதி தேர்வில் கட்சி தீர்மானத்தை மீறி வக்களிக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சிக்குள் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
