HNB FINANCEன் கிராமப்புற கல்வி வலுவூட்டல் திட்டத்தின் மற்றொரு படி வடினகல கல்லூரியில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, தனது கிராமியக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பின்தங்கிய பாடசாலையான அம்பாறை மாவட்டத்தின் வடிநாகல கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக கணினி மற்றும் பாடசாலை நூலகம் உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை அண்மையில் அன்பளிப்பு செய்தது.

சமூகப் பொறுப்புணர்வுள்ள நிததி நிறுவனமாக HNB FINANCE நிறுவனம் ‘நோக்கம்’ எனும் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளின் முன்னேற்றம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு சமூகத்தை பலப்படுத்துவதற்காக தமது உச்ச அளவான பங்களிப்பை பெற்றுக் கொடுத்து வருகிறது.

“HNB FINANCE PLC பல ஆண்டுகளாக பல்வேறு சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் பின்தங்கிய சமூகத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பெரும் சேவைகளைச் செய்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளின் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமான ​​வடினாகலை பாடசாலையை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் இன்னுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (2019-2022) சிரேஷ்ட உபதலைவர் நொயேல் ஜோசப் மற்றும் அதன் சிரேஷ்ட உபதலைவர் ஆகியோர் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில், கோவிட் தொற்றுநோய்களின் போது கூட, சமூகத்தை வலுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், ஏனெனில் இது எங்கள் சமூகப் பொறுப்பு.” என HNB FINANCE PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்தார்.

HNB FINANCE

2000ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, HNB FINANCE PLC என்பது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவுசெய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். HNB FINANCE PLC நாடு முழுவதும் 77 கிளைகளைக் கொண்டுள்ளது, SME லீசிங் சேவைகள், தங்கக் கடன் சேவைகள், வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், சேமிப்புகள் மற்றும் நிலையான வைப்பு வசதிகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது. HNB FINANCEஆனது Fitch மதிப்பீட்டில் தேசிய நீண்ட கால ‘A (lka) கிரெடிட் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் சிறந்த வேலைக்கான சான்றிதழிலும் பிராண்ட் நிதி தரவரிசையிலும் இலங்கையின் சிறந்த 100 வர்த்தகநாமங்களில் 57வது இடத்தைப் பெற்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles