எம்பிலிப்பிட்டிய முல்லகஸ்யாய காட்டுப்பகுதியில் கஞ்சா சேனை ஒன்று பொலிஸாரால் முற்றுகையிட்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த உப கரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த இந்த வியாபாரம் பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
முற்றுகையின் போது சுமார் 5 அடிக்கும் அதிக உயரமான சுமார் 75000 கஞ்சா செடிகள் பிடுங்கப்பட்டு அழிக்கப்பட்டதாக விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.










