ஒருகொடவத்த மேம்பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் முகமூடி அணிந்து நேற்றிரவு(25) சொகுசு காரொன்றில் வந்த இருவரால் கூரிய ஆயுதங்களால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த மீதொட்டமுல்லை பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளதுடன், அவருக்கு எதிராக 02 குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சமூக செயற்பாட்டாளர் எனக் கூறிக்கொள்ளும் டான் பிரசாத்தின் சகோதரரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
