போராட்டக்காரர்கள் 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புச் சேவைகளுக்கு இடையூறு விளைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட ‘கோட்டா கோ கம’ போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உட்பட 21 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் ஸ்டாலின், முதலிகே, சோசலிச இளைஞர் அணித் தலைவர், அருட்தந்தை ஒருவர் உள்ளிட்டோரும் பயணத்தடையில் உள்ளனர்.

கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

இதேவேளை, டுபாய் செல்ல முயன்ற வேளை விமானத்துக்குள் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தனிஷ் அலி எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles