மலையகத்தில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதற்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச முன்வந்திருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான காலநிலை தொடர்பாகவும் ஏறபட்டிருகக்கின்ற இழப்பீடுகள் தொடர்பாகவும் எதிர்கட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்தே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை அறிவித்துள்ளார்.
இந்த நிதி உதவியை மிகவிரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், ஏறபட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் வேறு தேவைகள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவுமாக இருந்தால் வர்த்தக வாணிப துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










