துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்னணி என்ன? விசாரணை வேண்டும்!

நாட்டில் இடம்பெறும் தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்புலம் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரபிரியதர்சன யாப்பா வலியுறுத்தினார்.

நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தினார்.

உரிய விசாரணையை முன்னெடுத்து, உண்மையை கண்டறிய வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles