மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 200 மீட்டர்வரை பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபடவின் பணிபுரையில், நேற்று மதியம் முதல் அந்த வீதி, லக்சபான தோட்ட சந்தி முதல் மூடப்பட்டுள்ளது.
இன்று காலை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தலைமையில் நில ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் வந்து நிலத்தை ஆய்வு செய்ய உள்ளதாக ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.
