பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண IMF இற்கு செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முட்டாள்களே- வாசுதேவ நாணயக்கார

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முட்டாள்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விமர்சித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் 1978 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிப்பதன் ஊடாக மேலும் வீழ்ச்சியை நோக்கி நாடு செல்வதை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைக்கு ஜனநாயக இடதுசாரி முன்னணி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தாய்வான், தாய்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உள்நோக்கங்களை அறிந்து கொண்டமையின் காரணமாக அதன் நிபந்தனைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை சமநிலைப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles