பன்றிக்கு இட்ட மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி

உடப்புஸ்சலவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரூபஹா அம்பகாலியத்த கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எச்.எம்.பிரேமரத்ன (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வயல் நிலத்தை நாசமாக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த வேலியமைத்து அதற்கு சட்டவிரோதமாக மின்சாரம் வழங்கியுள்ளார்.

ஒவ்வொறு நாளும் இரவு வேளையில் மின்சாரத்தை வேலிக்கு பாய்ச்சிவிட்டு அதிகாலை 05 மணியளவில் மின்சாரத்தை நிறுத்தி விட்டே வயலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) இரவு வழமைபோல வயல் நில பாதுகாப்பு வேலிக்கு மின்சாரத்தை வழங்கிவிட்டு நித்திரைக்கு சென்றுள்ளார்.

பின் சனிக்கிழமை (13) காலை வயலுக்கு சென்ற அவர் வயல் நில பாதுகாப்பு வேலிக்கு பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தை நிறுத்த மறந்து வயலுக்கு வேலியை தாண்டி சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்சலாவ பொலிசார் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles