தலவாக்கலையில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தங்கச் சங்கிலி அபகரிப்பு!

தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் , குடியிருப்புக்கு பின்னாலுள்ள சமயலறையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி நேற்று அபகரிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பெண் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலியை அவர் முகத்தில் மிளகாய் தூளை தூவி அபகரித்து சென்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெண் கூச்சலிட அயலவர்களும் ஓடி வந்து திருடனை தேடியபோது அவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு சந்தேக நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles