‘ரணில் – ராஜபக்ச என்பவர் சர்வாதிகாரி’ – ஹிருணிக்கா விளாசல்!

” ராஜபக்சக்களை விடவும் மிகவும் மோசமான சர்வாதிகாரியே ‘ரணில் ராஜபக்ச’ என்பவர்.” – என்று விளாசித் தள்ளியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்காக ஹிருணிக்கா பிரேமசந்திர இன்று சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய இன்று முற்பகல் விசாரணைக்கு வந்த ஹிருணிக்கா, சிஐடி அலுவலகத்துக்குள் செல்வதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். அவ்வேளையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

” போராட்டக்காரர்களின் கருணையால்தான் ரணில், ஜனாதிபதியானார். அந்த போராட்டம் தொடர்பில் விசாரணை நடத்தவே அழைக்கப்பட்டிருப்பதாக நம்புகின்றேன்.

போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுகின்றனர். இதன் ஓர் அங்கமாக நானும் இலக்கு வைக்கப்பட்டுள்ளேன். அமைதியாகவே போராடினோம், எமது போராட்டம் ராஜபக்சக்களுக்கு மட்டுமே தலையிடியாக அமைந்தது.

எது எப்படி இருந்தாலும் ஒடுக்குமுறை செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பல்கலைக்கழக மாணவர்கள்கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகின்றனர். ராஜபக்சக்களைவிடம், மோசமான சர்வாதிகாரியே ரணில், ராஜபக்ச.” – என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles