” போராட்டங்களை ஒடுக்கி, ஜனாதிபதி ரணிலால் ஆட்சியை முன்கொண்டு செல்ல முடியாது.” என்று ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தை உடன் கலைத்து, மக்கள் ஆணைக்கு இடமளிக்குமாறு வலியுறுத்தி நுகேகொடையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
” மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க , 134 பேரால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக ஆட்சி செய்கிறார். எனவே அவர், தம்மை தெரிவு செய்ய ராஜபக்சர்களை சந்தோசப்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமே நேற்று யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் அமைதிப் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
சம்பந்தமே இன்றி கைதுகள் இடம்பெறுகின்றன. மக்களை அச்சுறுத்தவே இப்படியான முயற்சிகள் இடம்பெறுகின்றன. ” – எனவும் அநுர சுட்டிக்காட்டினார்.