சௌமியமூர்த்தி தொண்டமானின் 109 ஆவது ஜனன தினம் இன்று

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின், 109 ஆவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு காங்கிரஸால் ஆன்மீக மற்றும் உதவித்திட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார்.  இலங்கை – இந்திய காங்கிரஸை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாற்றி, பல வருடங்கள் தலைமைப்பதவியில் நீடித்தவர். 1977 முதல் அமைச்சு பதவிகளை வகித்தவர்.  1947 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். 60 மற்றும் 65 களில் நியமன எம்.பியாக நாடாளுமன்றம் சென்றார். 77 இல் நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

Related Articles

Latest Articles