மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் சபையில் சமர்பித்து, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும் எனவும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றியளித்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.










