வெகுவிரைவில் மாநகரசபையாகிறது ஹட்டன் நகரசபை! பிரதமர் உறுதி!!

ஹட்டன் நகரசபை வெகுவிரைவில் மாநகரசபையாக தரமுயர்த்தப்படும் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இடைக்கால வரவு – செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” பிரதமருடன் பேச்சு நடத்தினோம். அந்தவகையில் ஹட்டன் நகரசபையை வெகுவிரைவில் மாநகரசபையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். பிரதேச செயலக விவகாரத்துக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.” – எனவும் ஜீவன் குறிப்பிட்டார்.

அதேவேளை, மலையக மக்களும் இலங்கையர்களே, எனவே, அவர்களை பிரித்து பார்க்க வேண்டாம் எனவும் சபையில் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles