லுணுகலை, அடாவத்தை எல்டராடோ பிரிவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபத்தை தேசப்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் லுணுகலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ரோட் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரும், எல்ரோட் – மாதபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலயத்தின் நுழைவாயில் கதவை நேற்றிரவு உடைத்துக்கொண்டு உள்சென்ற நபர்கள் , ஆலயத்தின் முன்றலில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்த புனித செபஸ்தியார் சிலையை அகற்றி அதனை எல்டராடோ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் கொண்டு சென்று நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர், நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நிருபர் – ராமு தனராஜ்
