பிலியந்தலை நகரில் அதிகரித்து வரும் வர்த்தக சமூகத்தினருக்கு மிகவும் சிறந்த வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, தமது பிலியந்தலை வாடிக்கையாளர் நிலையத்தை இலக்கம் 92/A, மொரட்டுவை வீதி, பிலியந்தலை என்ற விலாசத்தில் அமைந்துள்ள சிறந்த இடவசதி கொண்ட புதிய கட்டிடத்திற்கு அண்மையில் இடமாற்றமடைந்துள்ளது.
வார நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தமது வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறந்திருப்பதுடன் வங்கியின் இடவசதிகளுடன் கூடிய புதிய சூழலில் அனைத்து விதமான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் HNBஇன் முன்னணி வங்கி ஆலோசனை சேவையான Priority Circle Unit (முன்னணி வங்கிப் பிரிவு)ம் இந்த புதிய வாடிக்கையாளர் நிலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிலியந்தலை நகர் மற்றும் அதனை அண்டியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகள் குறித்து புதிய அத்தியாயம் ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நவீன வாடிக்கையாளர் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புதிய வாடிக்கையாளர் மத்திய நிலையத்தின் திறப்பு நிகழ்வுக்கு HNBஇன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மற்றும் பிரதான நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமான தில்ஷான் ரொத்ரிகோ, பிரதம அதிதியாக கலந்து கொண்ட கெஸ்பேவ பிரதேச செயலாளர் கே.பீ. பிரேமதாஸ ஆகியோர் கலந்து கொண்டதோடு HNBஇன் வலையமைப்பின் நிர்வகிப்பு தொடர்பான பிரதி பொது முகாமையாளர் வினோத் பெர்நான்தோ உள்ளிட்ட வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய வாடிக்கையாளர் நிலையம் தொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் நிறைவேற்று பணிப்பாளரும் பிரதான நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமான தில்ஷான் ரொத்ரிகோ, பிரதேசத்தில் வர்த்தக மற்றும் வாடிக்கையாளர் பெருமக்களுடன் வங்கி ஏற்படுத்திக் கொண்டுள்ள விசேட கூட்டாண்மை குறித்து தெளிவுபடுத்தினார்.
“பிலியந்தலை மக்களின் கனவினை நனவாக்குவதற்கு அவர்களுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும். டிஜிட்டல் மற்றும் முன்னணி வங்கி நிலையமாக முழுமையான வசதிகளுடன் கூடிய இந்த புதிய கட்டிடமானது எதிர்காலத்திற்காக எமது அர்ப்பணிப்பு குறித்து சாட்சி பகர்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” என தெரிவித்தார்.
HNB Payfast, HNB MOMO, HNB Solo, HNB AppiGo போன்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்தும் தளத்தின் ஊடாக HNB பிரதேசங்களுக்குள் தமது வங்கிச் சேவைகளை பலப்படுத்தி முன்னேரிவரும் வர்த்தக சமூகத்தினருக்கு வசதிகளை டிஜிட்டலாக மேம்படுத்தியுள்ள வங்கிச் சேவைகளை வழங்குகிறது.
HNBஇன் நிறைவேற்று பணிப்பாளரும் மற்றும் பிரதான நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமான தினேஷ் ரொத்ரிகோ, பிரசாத் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரத் தர்மசிறியிடமிருந்து முதலாவது வைப்பினை ஏற்றுக் கொள்ளப்படுவதையும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிலியந்தலை HNB வாடிக்கையாளர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் சமிந்த சுது ஆராச்சி ஆகியோரும் படத்தில் இருப்பதை காணலாம்.