தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
ஒரு பந்து மீதமிருக்க, ஒரு ஓட்டம் அதிகம் பெற்று, நிலை தளராமல் நிதானமாக ஆடி பாக் பையன்கள் வென்றார்கள்.
ரிஸ்வான் எத்தகைய பந்துக்கு தட்டுவார், எதற்கு விளாசுவார் என ஊகிக்க முடியாத கூல் பெட்ஸ்மன்.

ஆனாலும் அந்த ஆசிப், குஷ்தில் கடைசி இரட்டையர்களை மறக்க முடியுமா? கவனிக்க வேண்டியது, அந்த வேளையின் “பிரஷர்” முகங்களில் வழிந்தோட வென்று முடித்தார்கள்.
இது T20. டெஸ்ட் ஆட்டங்களில் இப்படி கடைசி இருவரை, “நைட்-வொட்ச்மேன்” என்போம். இதைதான் ரணில், தன்னை நம்நாட்டு அரசியல் மெட்சில் நைட்-வொட்ச்மேன் என்று கூறிக்கொண்டார்.
ஆனால் மிஸ்டர் பிரசிடென்ட், இந்த “வொட்ச்மேன்” பையன்கள் அடித்து, தட்டி வென்று விட்டார்கள் என்பதை கவனியுங்கள்..!
வழமைபோல் கோஹ்லி சிறப்பாட்டம். ஏனோ, ஓல்ரவுண்டர், பலே பாண்(டி)யா இம்முறை ஒளிரவில்லை.
எப்படியும் அங்கு அரங்கு நிறையவும், உலகெங்கும் தொலைகாட்டிகளில் ஒட்டியும் நின்ற நமக்கு, வட்டியும், முதலுமாக “நல்ல கிரிகட்” கிடைத்தது.










