சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட இணக்கப்பாடுகள் எவை என்பன தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நேற்று வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவை எவ்வாறான இணக்கப்பாடுகள் என்பன தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்குள் தகவல்கள் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் அரச கணக்கு குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நான் கேள்வி எழுப்புவேன்.
இலங்கையில் ஊழல் இடம்பெற்றுள்ளது என ஐ.எம்.எப். சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ஊழல்களை தடுக்க சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ” – என்றார்.
