ஐ.தே.கவின் தலைவர்களாக செயற்பட்டவர்கள் தொடர்பான பார்வை…1947 – 1994

1.டி.எஸ். சேனாநாயக்க

1946 செப்டம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. அதன் ஸ்தாபகத் தலைவராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைய வேண்டும் என அரசியல் ரீதியில் தலைமைத்துவம் வழங்கியவர்களில் இவர் பிரதானமானவர்.

1947 ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 20 வரை 19 நாட்கள் நடைபெற்ற இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி 42 ஆசனங்களைக் கைப்பற்றி – ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் அரியணையேறியது. தமிழ்க்காங்கிரசும் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக தேசப்பிதா டி.எஸ். சேனாநாயக்க பதவியேற்றார். புரட்சிகரமான திட்டங்களையும் முன்னெடுத்தார்.

டி.எஸ். சேனாநாயக்க 1952 மார்ச் 22 ஆம் திகதி அகால மரணமடைந்தார். இவரின் ஆட்சி காலத்திலேயே மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

2.டட்லி சேனாநாயக்க

தந்தையின் மறைவின் பின்னர், மகனான டட்லி சேனாநாயக்க 1952 மார்ச் 26 ஆம் திகதி இலங்கையின் 2 ஆவது பிரதம அமைச்சராக பதவியேற்றார். கட்சியின் தலைமைப் பதவியையும் பொறுப்பேற்றார். கட்சியை வெற்றிகரமாக வழிநடத்த தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

அதன்பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் – அதாவது 1952 ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.இதன்படி 1952 மே 24 ஆம் திகதி முதல் 30 வரை 4 நாட்கள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

95 ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகளிலிருந்தும் சுயேட்சைக்குழுக்களிலிருந்து 306 பேர் 89 தொகுதிகளில் போட்டியிட்டனர். தேர்தலில் 70.70 வீத வாக்குபதிவு இடம்பெற்றிருந்தது.

44.08 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக்கட்சி 54 ஆசனங்களையும், 15.52 சதவீத வாக்குகளுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 09 ஆசனங்களையும், லங்கா சமசமாஜக்கட்சி 9 ஆசனங்களையும், புரட்சிகர லங்கா சமசமாஜக்கட்சி, 4 ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், தமிழரசுக்கட்சி 2 ஆசனங்களையும், இலங்கை தொழிற்கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின.

சுயேச்சைக்குழுக்களில் போட்டியிட்ட 12 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். நியமன அடிப்படையில் 6 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதால் இலங்கை, இந்திய காங்கிரஸ் தேர்தலில் களமிறங்கமுடியாமல்போனது. இறுதியில் டல்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிவாகைசூடியது.

எனினும், 1952 இல் இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அரிசி விலை அதிகரிப்பானது அரசாங்கத்துக்கு பேரிடியாக அமைந்தது. மறுபுறத்தில் இடதுசாரிகட்சிகளும் போராட்டங்கள்மூலம் தலையிடிகொடுத்தன.

இதனால் 1953 ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியை டட்லி சேனாநாயக்க இராஜினாமா செய்தார். தலைமைப்பதவியும் கைமாறியது.

3.சேர்.ஜோன் கொத்தலாவ

டட்லி சேனாநாயக்க இராஜினமா செய்ததையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராக செயற்பட்ட சேர்.ஜோன் கொத்தலாவ புதிய பிரதமராக பதவியேற்றார்.

1953 ஒக்டோபர் 12 முதல் 1956 ஏப்ரல் 12வரை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார்.

பிரதமராக புரட்சிகரமான சில திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும், அவரால் கட்சியை உரிய வகையில் கட்டியெழுப்ப முடியாமல் போனது.

ஆங்கில மொழிக்கு முன்னுரிமை, பிக்குகள் மதிக்கப்படாமை உட்பட மேலும் சில காரணங்களால் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்மீது மக்கள் கடும் அதிருப்தியில் காணப்பட்டனர்.

மாற்று தேர்வாக – தேசியத்தை முன்னிலைப்படுத்திய சுதந்திரக்கட்சிமீது நம்பிக்கை வைத்தனர். பௌத்த தேரர்களும் ஓரணியில் திரண்டனர்.

இதனால் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சேர். ஜோன் கொத்தலாவயின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்தது.

4. டட்லி சேனாநாயக்க

1956 இல் நடைபெற்ற இலங்கையின் 3 ஆவது பொதுத்தேர்தலில் 51 ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரியணையேறியது.

ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 14 ஆசனங்களைக் கைப்பற்றிய லங்கா சமசமாஜக்கட்சி மீண்டும் பிரதான எதிர்க்கட்சியானது.

இதனால் ஐ.தே.கவின் தலைமைப்பொறுப்பு 1956 இல் மீண்டும் டட்லி சேனாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார். 1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையில் 4 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 50 ஆசனங்களை வென்று ஆட்சியமைத்தது.

எனினும், நாடாளுமன்ற சிம்மாசன உரையின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐ.தே.கவுக்கு தோல்வி ஏற்பட்டது.இதனால் தேர்தல் நடைபெற்று 24 நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி 1960 ஜீலை 20 ஆம் திகதி இலங்கையில் ஐந்தாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதால் 1960 ஒகஸ்ட் 05 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவராக டட்லி சேனாநாயக்க கடமையேற்றார். 1964 டிசம்பர் 17 ஆம்திகதிவரை அப்பதவியில் நீடித்தார்.

1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துசெல்லும் வகையில் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கினார். 1973 ஏப்ரல் 13 ஆம் திகதி காலமாகும்வரை கட்சி தலைவராக செயற்பட்டார்.

5. ஜே.ஆர்.ஜயவர்தன

1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றது. 17 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கட்சியானது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஜெ.ஆர். ஜயவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. 1973 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை ஜே.ஆர். ஜயவர்தன ஏற்ற பின்னரே அசுர வேகத்தில் கட்சி வளர்ச்சி கண்டது.

குறிப்பாக 1977 ஜீலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஐ.தே.க. மீண்டும் அரியணையேறியது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைபலம் இருந்ததால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உருவாக்கி, 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இவரே. 1982 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கட்சி தலைவராக வெற்றிநடைபோட்டார்.

அதன்பின்னர் 1982 டிசம்பர் 22 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்திய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்துக்கொண்டார்.

இலங்கை அரசியலில் இன்றளவிலும் பேசப்படுகின்ற ஓர் அரசியல் தலைவராக ஜே.ஆர். ஜயவர்தன விளங்குகிறார். 1973 முதல் 1989வரை ஐ.தே.க. தலைவர் பதவியை வகித்துள்ளார். 1996 நவம்பர் முதலாம் திகதி காலமானார்.

இவரின் தலைமைத்துவமே ஐ.தே.கவுக்கு பொற்காலம் என கருதப்படுகின்றது.

6. ரணசிங்க பிரேமதாச

1988 டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ரணசிங்க பிரேமதாச, 1989 ஜனவரில் ஐ.தே.கவின் தலைமைப் பதவியையும் பொறுப்பேற்றார்.

1982 இல் சர்வஜன வாக்கெடுப்புமூலம் நாடாளுமன்ற ஆயுட்காலம் நீடிக்கப்பட்டதால் 89 இல்தான் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிநடைபோட பிரேமதாச சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கினார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்கும் எண்ணத்துடனேயே இருந்தார். எனினும், 1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டார்.

7. டி.பி.விஜேதுங்க

பிரேமதாசவின் மறைவின் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்ற டி.பி. விஜேதுங்க குறுகிய காலம் ஐ.தே.க. தலைமைப்பதவியையும் வகித்தார். 1994 நவம்பர் 12 ஆம் திகதிவரை ஐ.தே.க. தலைவராக செயற்பட்டார்.

8. ரணில் விக்கிரமசிங்க

1994 இல் கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.  அன்றிலிருந்து இன்றுவரை அவர் நீடிக்கின்றார்.

ஆர்.சனத்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles