அமரர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தாரை சந்தித்தார் ஜனாதிபதி – தேவையான உதவிகளை வழங்கவும் ஏற்பாடு

நிட்டம்புவ பிரதேசத்தில் கடந்த மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.

குறித்த சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட குடும்ப நல விடயங்கள் குறித்து கேட்டறிந்ததோடு, பிள்ளைகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தமக்கு  அறிவிக்குமாறு கூறினார்.

அந்த பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குடும்ப நலனுக்காகவும் அரசாங்கத்தின் நன்கொடையின் ஊடாகவோ தனிப்பட்ட முறையிலோ எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் உயிரிழந்த  அமரகீர்த்தி அத்துகோரலவின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தனவின் சார்பில் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து ஜனாதிபதியினால் நிதியுதவி வழங்கப்பட்டமையும் நினைவூட்டத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles