நுவரெலியா, மீலிமான பிரதான வீதியின் ரூவான்எலிய பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் நுவரெலியா, மீபிலிமான மற்றும் அம்பேவளைக்கான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
கடும் சிரமத்துக்கு பின் நுவாரெலியா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டினை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வந்தனர்.

இவ்வீதி ஓரங்களில் பல இடங்களில் மண்சரி ஏற்பட வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டி.சந்ரு செ.திவாகரன்
