நுவரெலியா மாவட்டத்துக்கான புதியபிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எச்.எஸ்.என்.பீரிஸ், இன்று தமது கடமைகளை, நுவரெலியாவிலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
புதிய பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதன்பின்னர் சர்வமதத் தலைவரின் ஆசீர்வாதத்துடன் கடமையேற்றார்.
இதற்கு முன்னர் நுவரெலியாவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க இடமாற்றம் செய்யப்பட்டமையினால் ஏற்பட்டவெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக எச்.எஸ்.என்.பீரிஸ் கடமையாற்றியுள்ளார்.
டி.சந்ரு செ.திவாகரன்
