அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அரச இல்லமான ஹோலிரூட் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக குறித்த அரண்மனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து 6 மணிநேர பயணத்தின் பின்னர் கொண்டு வரப்பட்ட மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடல் நாளை 24 மணி நேரம் எடின்பரோவில் உள்ள செயின்ட் கில்ஸ் தேவாலயத்தில் வைக்கப்படும், அங்கு பொதுமக்கள் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்பளிக்கப்படும்.

அதன்பிறகு, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் எபேயில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles