பதுளை, லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் பழைய ஸ்டோர் தோட்டத்தில் 13 அடி நீளமும் 36 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பொன்று தோட்ட தொழிலாளர்களால் இன்று பிடிக்கப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலில் ஈடுப்பட்டிருந்த பெண்ணொருவரே பாம்பை கண்டுள்ளார். இதனையடுத்து இது தொடர்பில் சக தொழிலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் , மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு லுனுகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
படமும், தகவலும் ராமு தனராஜா