2, 500 ரூபா சம்பளம் வேண்டும்! தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!!

ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்டத்தில் 7 பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 600 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய தமக்கு வேதனம் வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 2, 500 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கொழுந்து நிலுவையின்போது பாரபட்சம் உட்பட மீறப்படும் தொழில்சார் உரிமைகளையும் போராட்டக்காரர்கள் பட்டியலிட்டனர்.

நமது நிருபர்கள் – கௌசல்யா, பெருமாள்

Related Articles

Latest Articles