ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் -எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் பருமனால் அவதிப்பட்டால், அவர்கள் உயிரிழக்க கூட நேரிடும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் 10 குடும்பங்களில் 04 வீடுகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என உலக உணவுத் திட்டம் வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பலருக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles