பழைய இரும்பு தண்டவாளங்களை விற்பனை செய்வதற்கான சர்வதேச விலைமனு கோரலை இலங்கை புகையிரத திணைக்களம் மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

“அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, பழைய உலோகங்களை சர்வதேச விலைமனு கோரல் மூலம் டொலருக்கு விற்குமாறு நான் அறிவுறுத்தினேன்” என்று அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
“நாங்கள் பழைய தண்டவாளங்கள் மற்றும் பிற உலோக கழிவுகளை விற்பனைக்காக சேகரிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.