‘இணக்கப்பாட்டு ஆவணத்தை தமிழ் மொழியில் தொழிலாளர்களுக்கு வழங்கவும்’

” மஸ்கெலியா, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் அனைவரும் சேர்ந்து எடுக்கின்ற தீர்மானங்கள் , கைச்சாத்திடப்படுகின்ற ஒப்பந்தங்கள் என அனைத்தும், தமிழிழ் மொழிபெயர்க்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்தார்.

” எல்லா தோட்டங்களிலும் ஒவ்வொரு நாளும் 18kg கொழுந்து எடுக்க முடியாது. கால நிலைக்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொழுந்து நிறையை கொடுக்க வேண்டும்,வேலை நாட்கள் முறையாக பிரித்து கொடுக்க வேண்டும்,
பெற்று வந்த சலுகைகள் அனைத்தும் முறையாக கொடுக்க வேண்டும்,

கொழுந்து இல்லை என்றால் அதற்கு மாற்று வழியாக தோட்டத்தை சுத்தபடுத்தும் வேலையை கொடுத்து அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்,

1000 ரூபா வழங்க வேண்டும் என்று வர்ததமானி அறிவித்த திகதியிலிருந்து 1000ரூபா கொடுக்காதபடியாள் நிலுவை பணம் முழுவதும் கொடுக்க வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles