கஞ்சா வளர்க்க பந்துலவும் ஆதரவு!

” ஏற்றுமதி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செய்கைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து அமைச்சரவையில் ஏதேனும் கலந்துரையாடப்பட்டதா எனவும், கஞ்சா வளர்ப்பு குறித்து தங்களின் தனிப்பட்ட கருத்து என்னவெனவும் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” பொருளாதார மேம்பாட்டுக்காக ஏற்றுமதி மற்றும் மருத்துவ தேவைக்காகவும், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் கஞ்சா வளர்க்க அனுமதி வழங்க வேண்டும் என அன்று முதல் சுட்டிக்காட்டி வருகின்றேன். இதனால் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானேன்.

அந்திய செலாவணி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், போதைக்காக அல்லாமல், ஏற்றுமதிக்காக அனுமதி வழங்குவது ஏற்புடைய நடவடிக்கை. இது தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற வேண்டும். ஏற்றுமதிக்காக கஞ்சா வளர்ப்பது குறித்து துறைசார் அமைச்சர், சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளார்” – என்றார்.

Related Articles

Latest Articles