காணாமல்போனவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படுகின்ற ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.
” பதிவாளர் நாயகத்தால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல்போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு ஒரு லட்சம் ரூபா தொகையை செலுத்துவதற்காக 2022.03.14 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், காணாமல் போனமைக்கான சான்றிதழை (Certificate of Absence) பெறுவதற்கு நீண்டகாலம் எடுப்பதால் , ஆளொருவர் காணாமல் போயுள்ளமையை இழப்பீட்டு அலுவலகம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின்,
காணாமல் போனமைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவதற்கும், செலுத்தப்படும் தொகையை 2 லட்சமாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – எனவும் அவர் கூறினார்.
