6 நாய்கள் மர்மமாக உயிரிழப்பு! நஞ்சு வைத்து கொலையா?

கனேவெல – பட்டியவெல பகுதியில் 6 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

இது தொடர்பில் பிரதேச வாசிகள், கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த நாய்கள் நஞ்சு வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கும் பிரதேச மக்கள், அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை உரிமையாளர்மீது சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், இக்குற்றச்சாட்டை கோழி பண்ணையின் உரிமையாளர் நிராகரித்துள்ளார்.

Related Articles

Latest Articles