மகாவலி ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த போதைப்பொருள் வியாபாரி கைது

கட்டுகஸ்தோட்டை- மகாவலி கங்கைக்கு அண்மித்த பகுதியில் நபரொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகாஸ்தோட்டை-மகாவலி​ கங்கையோரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருரைப் பொலிஸார் கைது செய்யச் சென்றபோது, அந்நபர் மகாவலி ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த போதும் போதைப் பொருளுடன் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 3,200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இதற்கு முன்பும் பல முறை போதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். அதே நேரம் சந்தேக நபருக்கு எதிராக இரண்டு நீதிமன்ற பிடியாணைகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

34 வயதுடைய மேற்படி சந்தேக நபரை கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles