நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணம் தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று பேச்சு நடைபெற்றது.
தொழில் அமைச்சர் மனுச நாணயகார, அமைச்சின் செயலாளர், நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரின்ஸ் குணவர்த்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,தவிசாளர் ராமேஸ்வரன் மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இப்பேச்சில் கலந்து கொண்டனர்.
இதன்போது நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணத்திற்கு கம்பனி நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்பதுடன்,உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக உரிய தொகை வழங்ப்பட வேண்டும் என தொழில் அமைச்சரிடம் இ.தொ.கா. வலியுறுத்தியது.
இளைஞன் மரணமடைந்த அன்று 15000 ரூபாய் மத்திரமே நட்ட ஈடாக வழங்க முடியும் என தெரிவித்த கம்பனி இ.தொ.காவின் தொடர் அழுத்தத்தினால் இ.தொ.காவிடம் அடிப்பணிந்து இன்று 40 இலட்சம் ரூபாய் வரை நட்ட ஈடு வழங்குவதாக உறுதியளித்தது.
கம்பனி வழங்க முன்வந்த தொகை குறித்து இ.தொ.கா கலந்து ஆலோசித்து முடிவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
