சீனாவின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பரில் இரண்டு வருட உயர்வை எட்டியதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை விவசாயிகளை தாக்கியது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி செலவின உயர்வின் தாக்கத்தில் இருந்து சீனாவில் உள்ள நுகர்வோர் பெருமளவில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால் சில்லறை பணவீக்கத்திற்கான முக்கிய அளவீடான நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI), கடந்த மாதம் 2.8 சதவீதத்தை எட்டியுள்ளது, இது ஆகஸ்ட் மாதத்தில் 2.5 சதவீதமாக இருந்தது.
ஏப்ரல் 2020 க்குப் பிறகு, கோவிட்-19 முடக்கங்களின் முதல் அலையிலிருந்து நாடு மீண்டபோது, இந்த குறியீடு மிக அதிகமாக உள்ளது என்று AFP தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் வெப்பநிலை 40 செல்சியசுக்கு மேல் பல வாரங்கள் நீண்டதும் இதில் தாக்கத்தை செலுத்தியது. இது ஆகஸ்ட் மாதத்தில் வறட்சியை ஏற்படுத்திய சீனாவின் வெப்பமான கோடைகாலமாகும்.
“அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய காய்கறிகளின் விலைகள் 6.5 சதவீதம் உயர்ந்துள்ளன” என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
அதன்படி, சீன நாட்டினர் அதிகம் விரும்பும் பன்றி இறைச்சியின் விலை 36 சதவீதம் உயர்ந்துள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது.
பணவீக்கப் பிரச்சனை தலைதூக்கியதால் சீன அதிகாரிகள் சமீபத்திய வாரங்களில் பலமுறை பன்றி இறைச்சி இருப்புக்களை ஆய்வு செய்கின்றனர்.
இதற்கிடையில், நாட்டின் தொழிற்சாலை பணவீக்கம் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கும் மேலான மிகக் குறைவான மூலப்பொருள் விலைகளின் பின்னணியில், தரவு காட்டுகிறது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 2.3 சதவிகித உயர்விலிருந்து குறைந்துள்ளதோடு, ஜனவரி 2021 க்குப் பிறகு மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.