சர்வதேச கிரிக்கெட் சபை, இன்று வெளியிட்டுள்ள புதிய ரி – 20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15 ஆவது இடத்தில் இருந்த விராட் கோஹ்லி 5 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு (635 ரேட்டிங் புள்ளி) முன்னேறியுள்ளார்.
இந்த தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 849 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.
நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே இந்த பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அதே போல் 2-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
T20I பேட்டிங் தரவரிசை
1.முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 849 புள்ளிகள்
2.டெவோன் கான்வே (நியூசிலாந்து) – 831 புள்ளிகள்
3. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) – 828 புள்ளிகள்
4.பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 799 புள்ளிகள்
5. ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) – 762 புள்ளிகள் 6. டேவிட் மலான் (இங்கிலாந்து) – 754 புள்ளிகள்
7. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) – 681 புள்ளிகள்
8. பெத்தும் நிஷாங்க (இலங்கை) – 658 புள்ளிகள்
9. விராட் கோலி (இந்தியா) – 635 புள்ளிகள்
10. முஹம்மது வசீம் (யுஏஇ) – 626 புள்ளிகள்
அதேவேளை, பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மகேஸ் தீக்சன 5 ஆவது இடத்திலும், வனிது அசரங்க 6 ஆவது இடத்திலும் உள்ளனர்.










