இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!

ரி – 20 உலகக் கிணண கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் – மெல்போர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடைசியாக இங்கிலாந்து அணி விளையாடிய போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது.

அதேபோல கடந்த 26ஆம் திகதி ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா ஆட்டமாக மாறலாம்.

Related Articles

Latest Articles