ஹிக்கடுவையில் இருவர் சுட்டுப்படுகொலை – வழக்குக்கு செல்லும் வழியில் பயங்கரம்!!

ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை – திராணகம பிரதேசத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத அதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles