கவிதை எழுதி முற்போக்கு கூட்டணியை கலாய்க்கிறார் திலகர்

தமிழ் முற்போக்கு கூட்டணியை மறைமுகமாக கலாய்த்துள்ளார் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக அரசியல் அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ்.

தமது முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் ஹெக்கூ பாணியில் கவிதையும் எழுதியுள்ளார்.

“கட்டி முடிக்கப்பட்டது கட்டடம்
விழுந்து நொறுங்கியது
அமைப்பு” – என்பதே அவரின் பதிவாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டமை கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி நொறுங்கிவிட்டது என சாடியுள்ளார் திலகர்.

Related Articles

Latest Articles