‘மலையக கட்சிகளின் ஒற்றுமை – வடகிழக்கு கட்சிகளுக்கு சிறந்த பாடம்’

மலையக கட்சிகளின் ஒருமைப்பாடு பாராட்டுக்குரியது. அதனை வடக்கு கிழக்கு கட்சிகளும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

மலையக கட்சிகளின் ஒருமைப்பாட்டை பாராட்டும் அதேவேளை அதனை முன்மாதிரியாக கொண்டு வடக்கு, கிழக்கு கட்சிகளும் தமிழ் மக்களுக்காக தமிழ் மண்ணுக்காக ஒவ்வொரு முக்கிய விடயங்களிலும் ஒருமைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். கொள்கைகளின் அடிப்படையிலும் தேர்தல் வெற்றிக்காகவும் தனித்து நின்றாலும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என தமிழ் தேசிய சபை வலியுறுத்துகின்றது என கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

காழ்ப்புணர்வுகளை கழைந்து, உயர்வு தாழ்வு, வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் தேசியம் மீது அக்கறையும் எண்ணப்பாடும் கொண்டவர்கள் தமிழர் தம் விடயங்களில் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இல்லாது போனால் அது வரலாற்று தவறாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles