இலங்கையில் குரங்கு அம்மை நோய் தொற்றிய முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாடு திரும்பிய
20 வயதான இளைஞர் ஒருவருக்கே குறித்த நோய் ஏற்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் முன்னெடுத்த பரிசோதனையில் , நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
